மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி திருவிழா

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது

Update: 2022-03-14 13:25 GMT
தென்திருப்பேரை:
மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் பங்குனி உத்திர  திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜையும் இரவு மெல்லிசை கச்சேரி, பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்று வருகிறது. இரவு ஒருமணிக்கு அய்யனார் கற்பக பொன் சப்பரத்தில் வீதி உலா வரும் காட்சி தினமும் நடைபெற்று வருகிறது. நேற்று ஆறாம் திருநாள் விழாவில் அய்யனாருக்கு புஷ்ப அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. பகல் ஒரு மணிக்கு அன்னதானம் நடைெபற்றது.  இரவு ஒரு மணிக்கு அய்யனார் மேலப்புதுக்குடி தெருக்களில் கற்பக பொன் சப்பரத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. வருகிற 18-ந் தேதி பங்குனி உத்திரத் திருவிழாவில் கும்பாபிஷேகமும், அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக பூஜையும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மேலப்புதுக்குடி எட்டு பங்கு இந்து நாடார்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்