ஜோலார்பேட்டை அருகே ஆட்டோ டிரைவர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

ஆட்டோ டிரைவர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-14 13:12 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூரை அடுத்த மட்றப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சதிஷ் குமார் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி துர்கா (வயது 29). இருவரும் 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வர்ஷனா (10) என்ற மகளும், ஹரிஹரன் (7) என்ற மகனும் உள்ளனர். கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, துர்கா கடந்த 10-ந் தேதி தனது பிள்ளைகளுடன் சென்னைக்கு சென்றுவிட்டார். அவரை அவருடைய தாயார் திலகா, கணவர் சதீஷ்குமார் ஆகிய இருவரும் துர்காவை ஜோலார்பேட்டை பகுதிக்கு அழைத்து வந்தன
ர்.

இந்தநிலையில்  ஜோலார்பேட்டை பகுதியில் தாய் வீட்டில் இருந்த தனது மனைவியை பார்ப்பதற்காக சதீஷ்குமார் சென்றுள்ளார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.  நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது துர்க்கா தூக்கில் பிணமாக தொங்கினார்.

 ஒஇதுகுறித்து அவருடைய தாயார் திலகா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்