மகன் இறந்த சோகம் தாங்காமல் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
மகன் இறந்த சோகம் தாங்காமல் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி ஜானகிஅம்மாள் (வயது85). இவரின் மகன் பூபதி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டாராம். இதனால் அன்று முதல் மனம் உடைந்து காணப்பட்ட ஜானகி அம்மாள் மகன் இறந்த சோகம் தாங்காமல் விஷம் குடித்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதுகுறித்து அவரின் பேரன் சேட்இப்ராகிம் நகரை சேர்ந்த சுரேந்திரன் (33) என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.