ஒரகடம் அருகே வேன் கவிழ்ந்து 8 பேர் காயம்

ஒரகடம் அருகே வேன் சாலை திருப்பத்தில் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2022-03-14 12:41 GMT
சென்னை மடிப்பாக்கம் அடுத்த கோவிலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 15-க்கும் மேற்பட்டோர், நேற்று காலை ஆரணி அருகே உள்ள படவேட்டம்மன் கோவிலில் நடைபெற உள்ள காதுகுத்து நிகழ்ச்சிக்காக வேனில் சென்றனர். வேன் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி அருகே வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை திருப்பத்தில் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்