செங்கல்பட்டு அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் பெண் பலி
செங்கல்பட்டு அருகே தேவாலய திருச்சபை கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் பெண் பலியானார்.
திருச்சபை கூட்டம்
ஈரோடு மாவட்டம் முனிசிபல் சத்திரம் நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சரளாதேவி (வயது 60).
இவர்களது மகன் தங்கராஜ். இவர்கள் தங்களது உறவினர்களான ரோஜாமணி (42), கவுதம் (17), அனுசுயா (14), சரோஜா (14), ஜெயலட்சுமி (45) ஆகியோருடன் காரில் ஈரோட்டில் இருந்து தாம்பரம் இரும்புலியூரில் உள்ள பிரபல தேவலாயத்தில் நடைபெறும் திருச்சபை கூட்டத்தில் பங்கேற்க வந்தனர். காரை தங்கராஜ் ஓட்டி வந்தார்.
சாவு
இவர்கள் நேற்று முன்தினம் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே வந்தனர். அப்போது அங்கு பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் முன்னால் உள்ள சாலை தெரியாமல் தங்கராஜ் 4 வழி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் கார் நிலைத்தடுமாறி கவிழ்ந்ததில் காரில் பயணம் செய்த சரளா தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இவர்களுடன் பயணம் செய்த ரோஜாமணி, கவுதம், அனுசுயா, சரோஜா, ஜெயலட்சுமி ஆகியோர் காயமடைந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.