தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-03-14 11:30 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி கந்தன் காலனி பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் முருகன் (வயது 54). இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த 6-ந்தேதி அன்று தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் லாரி செட்டில் நிறுத்தியுள்ளார். பின்னர் திரும்ப வந்து பார்த்தபோது அதை மர்மநபர்திருடி சென்று விட்டது தெரிய வந்தது. இதனையடுத்து முருகன் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர்நகரைச் சேர்ந்த திருமாள் மகன் சாரதி என்ற அர்ஜூனன் (23) முருகனின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து சாரதியை கைது செய்து, மோட்டார் சைக்கிளையும் மீட்டார். 

மேலும் செய்திகள்