மெரினா கடற்கரையில் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது
மெரினா கடற்கரையில் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது.
சென்னை,
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 23). இவர், சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார். மனோகரன் நேற்று முன்தினம் மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க சென்றிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 2 வாலிபர்கள், மனோகரனை பீர் பாட்டிலால் குத்திவிடுவதாக மிரட்டி 2 செல்போன்கள், ரூ.700 பணத்தை வழிப்பறி செய்து தப்பினர். இதுதொடர்பாக, மனோகரன் அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் மனோகரனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த அசோக் (21), சஞ்சய் (19) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.