கீழப்பழூவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அண்ணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் (வயது 55), அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் பாலகுமார் (19) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் மணல் மூடைகளை கடத்தி வந்தது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், இது குறித்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.