பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை மிகவும் முக்கியம்-மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை மிகவும் முக்கியம் மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி பேச்சு
சிக்கமகளூரு:
சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா பேகூர் கிராமத்தில் அரசு உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்காப்பு கலைகள் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி கலந்துகொண்டு பேசுகையில், கர்நாடகம் முழுவதும் 1,400 பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவிகள் தற்காப்பு பயிற்சி பெற்று தைரியமாக தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி மிகவும் முக்கியமானதாகும்.
மகாத்மா காந்தி கண்ட கனவை நினைவாக்க மாணவ-மாணவிகள் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து கொப்பா தாலுகா கவுரிகத்தே பகுதியில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கோட்டா சீனிவாச பூஜாரி கலந்து கொண்டு, காந்தியின் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வினய் குருஜி கலந்துகொண்டார்.