அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பதவி ஏற்க வேண்டும்-டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பதவி ஏற்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் வலியுறுத்தி உள்ளார்
பெங்களூரு: உத்தரபிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருந்தது. இதையடுத்து, 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து நேற்று டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் காங்கிஸ் காரியக்கமிட்டி ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சென்றிருந்தார். இந்த நிலையில், டி.கே.சிவக்குமாா் நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பதவி ஏற்க வேண்டும். உடனடியாக காங்கிரஸ் கட்சியின் முழு நேர தலைவராக ராகுல்காந்தி செயல்பட வேண்டும். இது எனது விருப்பம் மட்டும் இல்லை. பல மில்லியன் காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது தான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.