பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற அரசு பள்ளி சமையலர் கைது

பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற அரசு பள்ளி சமையலர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-13 21:16 GMT
பனமரத்துப்பட்டி:
பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவர், மஞ்சகுட்டை அரசு உண்டு உறைவிட பள்ளியில் சமையலராக உள்ளார். இவர், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். அந்த பெண் சத்தம் போடவே மணிகண்டன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக மணிகண்டனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்