ஆத்தூர்:
ஆத்தூர் அருகே மலையம்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த தமிழழகன் மகள் செல்லக்கிளி (வயது 18). இவர், தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். செல்லக்கிளிக்கு தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த செல்லக்கிளி தோட்டத்துக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்ததாக தெரிகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்லக்கிளியை ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் செல்லக்கிளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மல்லியக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.