ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.;
ஈரோடு
தமிழகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 504 மையங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமில் முதல் தவணை தடுப்பூசியை 1,990 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 10 ஆயிரத்து 20 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 619 பேரும் என மொத்தம் 12 ஆயிரத்து 629 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.