மக்காச்சோளம் விலை இருந்தும் விளைச்சல் இல்லை

மக்காச்சோளம் நல்ல விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.;

Update: 2022-03-13 21:01 GMT
தாயில்பட்டி, 
மக்காச்சோளம் நல்ல விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
மக்காச்சோளம் சாகுபடி 
வெம்பக்கோட்டை அருகே உள்ள குகன்பாறை, கஸ்தூரி ரங்காபுரம், சிப்பிப்பாறை, வால்சாபுரம், மேலசத்திரம், சங்கரபாண்டியபுரம், ஊத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை  பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
இதுகுறித்து மேல சத்திரத்தை சேர்ந்த விவசாயி பொன்ராஜ் கூறியதாவது:- 
மக்காச்சோளத்தை 2-வது கட்டமாக அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.1,400-க்கு விலை போனது. 
மகசூல் இல்லை 
ஆனால் இந்த ஆண்டு மக்காச்சோளம் விளைச்சலை தொடங்குவதற்கு முன்பு குவிண்டாலுக்கு ரூ.1,700 நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை காரணமாக வெம்பக்கோட்டை பகுதியில் அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது.
அறுவடை தொடங்கும் முன் குவிண்டாலுக்கு ரூ.2,100 நிர்ணயிக்கப்பட்டது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏக்கருக்கு 15 குவிண்டால் வரை கிடைக்க மகசூல் 3 குவிண்டால் மட்டுமே கிடைக்கிறது. இதனால் விலை இருந்தும், விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
இவ்வாறு அவர் கூறினர்.

மேலும் செய்திகள்