நெல் அறுவடை எந்திரம் மோதி விவசாயி பலி

நெல் அறுவடை எந்திரம் மோதி விவசாயி உயிரிழந்தார்.

Update: 2022-03-13 21:01 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவில் எசனை வடக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பிரகாசம்(வயது 65). விவசாயி. நேற்று மாலை கோவில் எசனை பகுதியில் உள்ள அவருடைய வயலில் நெற்பயிர் அறுவடை நடந்தது. இதில் நெல் அறுவடை எந்திர டிரைவரான பெரம்பலூர் மாவட்டம் தொண்டைமாந்துறையை சேர்ந்த நீலமேகம்(35), எந்திரம் மூலம் அறுவடை பணியில் ஈடுபட்டார். அப்போது பின்னால் நின்ற சுயம்பிரகாசம் மீது நெல் அறுவடை எந்திரம் மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புள்ளம்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்