ஜன்னல் கதவு திருட்டு

தாயில்பட்டி அருகே ஜன்னல்களை திருடி சென்றனர்.

Update: 2022-03-13 20:54 GMT
தாயில்பட்டி, 
தாயில்பட்டி ஊராட்சி கட்டணஞ்செவல் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன். இவர் அப்பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். புது வீட்டிற்கு தேவையான 6 மர ஜன்னல்கள், நிலைகதவுகள், வாங்கி புது வீட்டில் வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று வேலைக்கு புது வீட்டுக்கு சென்றபோது வாங்கி வைத்திருந்த நிலை கதவு, 6 ஜன்னல் கதவுகள் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்