சுற்றுலா வேனை திருடிய வாலிபர் கைது
சுற்றுலா வேனை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
திருச்சி
திருச்சி உய்யகொண்டான் திருமலை ரெங்க நகர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம்(வயது 44). இவர், சொந்தமாக சுற்றுலா வேன் ஓட்டி வருகிறார். இவர் கடந்த மாதம் 2-ந் தேதி திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள அமைப்புசாரா ஓட்டுனர்கள் சங்க வேன் நிறுத்தத்தில் தனது வேனை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர், அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது அந்த வேன் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த வேனை திருடிச்சென்ற மர்ம நபர் டோல்கேட் வழியாக செல்லும்போது நுழைவு கட்டணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தி மோகனசுந்தரம் செல்போனுக்கு வந்தது. இதுகுறித்து அவர் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி திண்டிவனம் அருகே டோல்கேட் பகுதியில் அந்த சுற்றுலா வேனை மீட்டனர். மேலும், அந்த வேனை திருடி சென்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த செந்தில் என்கிற விஜயரங்கன் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.