தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 150 வழக்குகளுக்கு தீர்வு

கும்பகோணத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 11 லட்சம் வசூல் செய்யப்பட்டது.;

Update: 2022-03-13 20:23 GMT
கும்பகோணம்:
கும்பகோணத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 11 லட்சம் வசூல் செய்யப்பட்டது. 
தேசிய மக்கள் நீதிமன்றம் 
தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன் ஆணைப்படி சார்பு நீதிபதி சுதா அறிவுரையின்படி கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் நீதிமன்றங்களில்  தேசிய மக்கள் நீதிமன்றம் முகாம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. கும்பகோணத்தில் நடந்த முகாமில் தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரகாஷ், கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்  சண்முகப்பிரியா ஆகியோர் தலைமையிலும், கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி மும்தாஜ், நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாண்டி மகாராஜா, முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடேச பெருமாள், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நீதிபதி பரணிதரன் ஆகியோர் முன்னிலையிலும் பல்ே்வறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 
150 வழக்குகளுக்கு தீர்வு 
இதேபோல் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காசோலை வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், வாய் தகராறு வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உள்ளிட்ட 400 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்ொள்ளப்பட்டன.  இதில் 150 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.1 கோடியே 11 லட்சத்து 6 ஆயிரத்து 52 வசூல் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தன்னார்வ பணியாளர்கள் ராஜேந்திரன், குணசீலன் மற்றும் நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்