மலைக்கோட்டை பகுதியில் பக்தர்கள் சாலை மறியல்

மலைக்கோட்டை பகுதியில் பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்;

Update: 2022-03-13 20:09 GMT
திருச்சி
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்ப உற்சவ விழாவையொட்டி தினமும் சாமி வீதிஉலா நடைபெற்று வருகிறது. வழக்கமாக மலைக்கோட்டை கோவிலின் உள்வீதி மற்றும் வெளிவீதிகளில் சாமி வீதி உலா நடத்தப்படும். ஆனால், கடந்த சில நாட்களாக உள்வீதியில் மட்டும் வீதி உலா நடத்தப்பட்டு வந்துள்ளது. வெளிவீதியில் உள்ள சாலையை சீரமைத்து அங்கும் வீதிஉலா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைத்து இருந்தனர். ஆனால் நேற்று இரவு சாமி வீதிஉலா புறப்பட்டபோது, வெளிவீதியில் செல்ல அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து பக்தர்கள் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சமயபுரம் மாரியம்மன்கோவிலுக்கு பூ ஊர்வலம் நடைபெற்று வருவதால் பாதுகாப்பு காரணமாக வெளிவீதியில் சாமிஊர்வலம் நடத்த அனுமதிக்க முடியாது எனக்கூறினார்கள். இதனை ஏற்க மறுத்து தொடர் மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு அவர்களை சமாதானம் செய்து வெளிவீதியில் ஊர்வலம் நடத்த அனுமதித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்