கிராம உதவியாளர்கள் சங்க கூட்டம்
கடையநல்லூரில் கிராம உதவியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
கடையநல்லூர்:
தென்காசி, நெல்லை மாவட்ட கிராம உதவியாளர்கள் சங்க கூட்டம் கடையநல்லூரில் நடந்தது. மாநில தலைவர் முத்தையா தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட தலைவர் அருணாசலம், செயலாளர் கருணாலய பாண்டியன், மாநில செயலாளர்கள் தங்கமணி, சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், கடையநல்லூர் வட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.