இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

நெல்லையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-03-13 19:26 GMT
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்களை தூக்கிலிட வலியுறுத்தியும், பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன், மாநில பேச்சாளர் காந்திமதி நாதன், பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். இதில் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் பகவதி, குருவம்மாள், பாலம்மாள், மாவட்ட பொது செயலாளர் பிரம்மநாயகம், துணைத்தலைவர்கள் சங்கர், துரை ராஜ், செயலாளர்கள் சுடலை, ராம.செல்வராஜ், ராஜசெல்வம், தென்காசி மாவட்ட பொது செயலாளர் மணிகண்டன், துணை தலைவர் முருகன், குமரி மாவட்ட அமைப்பாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்