சுசீந்திரம் அருகே பிரபல கஞ்சா வியாபாரி கைது
சுசீந்திரம் அருகே பிரபல கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.;
மேலகிருஷ்ணன்புதூர்,
சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுசீந்திரம் அருகே உள்ள தண்டநாயக்கன்கோணம் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த அந்தோணி (வயது 47) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், இவர் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா, ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் எடைபோடும் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அந்தோணியை கைது செய்து குழித்துறை சிறையில் அடைத்தனர்.