நெல்லையில் சரத்குமாருக்கு வரவேற்பு
நெல்லையில் சரத்குமாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நெல்லை:
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். பின்னர் அங்கிருந்து நெல்லை வழியாக நாகர்கோவிலில் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்கு சென்றார். அவருக்கு நெல்லை கே.டி.சி. நகரில் நெல்லை மாநகர மாவட்ட ச.ம.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில மாணவர் அணி துணை செயலாளர் நட்சத்திர வெற்றி தலைமையில் சரத்குமாருக்கு பூங்கொத்து, சால்வைகள் அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
இதில் மாவட்ட பொருளாளர் சரத் ஆனந்த், துணை செயலாளர்கள் வெங்கடேஷ், சின்னதுரை, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் ராகவன், நெல்லை தொகுதி செயலாளர் செல்வம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.