பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா?

வடபாதிமங்கலத்தில் பழுதடைந்துள்ள அரசு பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Update: 2022-03-13 19:19 GMT
கூத்தாநல்லூர்:
வடபாதிமங்கலத்தில் பழுதடைந்துள்ள அரசு பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அரசு உயர்நிலைப்பள்ளி
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வடபாதிமங்கலம், உச்சுவாடி, மாயனூர், பூசங்குடி, புனவாசல், கிளியனூர், சோலாட்சி, எள்ளுக்கொல்லை காலனி, மாதாகோவில் கோம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடம் பழுதடைந்த நிலையில், சிமெண்டு காரைகள் பெயர்ந்து, விரிசல்கள் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
புதிய கட்டிடம் கட்டப்படுமா?
இந்த அரசு உயர்நிலைப்பள்ளியில் அதிகளவில் பள்ளி கட்டிடங்கள் இல்லை என்ற போதிலும் பழுதடைந்த கட்டிடம் ஒன்று பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் பூட்டியே கிடக்கிறது.
இதனால் சில வகுப்புகள் வளாகத்தின் வெளியில் நடந்து வருவதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது அந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு அந்த வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டப்படுமா? என்பது அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்