மருத்துவ மதிப்பீட்டு முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மூலம் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகிற 16-ந் தேதி என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2022-03-13 18:59 GMT
சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மூலம் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகிற 16-ந் தேதி ெதாடங்குகிறது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

சிவகங்கை மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டக்கூறின் கீழ் விழிப்புணர்வு, மருத்துவ மதிப்பீட்டு முகாம் 12 ஒன்றியங்களிலும் வருகிற 16- ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மருத்துவ முகாம்களின் வாயிலாக பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனுடைய குழந்தைகளை மதிப்பீடு செய்து அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை போன்றவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. 

மருத்துவ முகாம்

2021-2022-ம் கல்வியாண்டில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் முன்தொடக்க நிலை, தொடக்கநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாற்றுத் ்திறனுடைய மாணவ, மாணவிகள் அனைவரையும் இந்த மருத்துவ முகாம்களில் கலந்துகொள்ள செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், இணை இயக்குனர் (சுகாதாரம் மற்றும் மருத்துவப் பணிகள்), இளங்கோ மகேசுவரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்