தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-13 18:33 GMT
அரியலூர்
குப்பைகளால் நோய் பரவும் அபாயம் 
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சியில் அள்ளப்படும் குப்பைகளை கோபாலாப்பட்டினம் கிராம  கடலின் முகத்துவாரத்தின் ஆற்றின் கரைபகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் மாலை நேரங்களில் கடல்நீர்  பெருக்கத்தின் போது ஆற்று நீரில்  குப்பைகள் கலப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி அருகிலுள்ள வீடுகளில் நோயை பரப்புகின்றன. மழை காலங்களில் மழைநீர் கடலுக்குள் செல்லாமல் இந்த குப்பை மேடுகளால் தண்ணீர்  தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நாட்டாணிபுரசக்குடி, புதுக்கோட்டை. 

குண்டும், குழியுமான சாலை 
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே கரூர்-ஈரோடு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புன்னம் பகுதிக்கு செல்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது. தார்சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிதிலமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், புன்னம்சத்திரம், கரூர். 

சுகாதார மைய கட்டிடம் செயல்பாட்டிற்கு வருமா? 
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் கிராம துணை சுகாதார மைய கட்டிடப்பணி முடிவடைந்து இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயன்பாடு இன்றி உள்ள துணை சுகாதார நிலைய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மாத்தூர், புதுக்கோட்டை. 

பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பணி 
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் திருச்சி மெயின் சாலையின் ஓரத்தில் கழிவுநீர் செல்லும் வகையில் புதிதாக வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.  தற்போது கான்கிரீட் போடப்பட்டு உள்ள நிலையில் 3 மாதங்கள் ஆகியும் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. இதனால் அந்த வாய்க்காலில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. அத்துடன் துர்நாற்றம் வீசுவதுடன்  கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பசுபதிபாளையம், கரூர். 

எரியாத உயர்கோபுர மின்விளக்கு 
புதுக்கோட்டை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் முள்ளூர் மருத்துவக்கல்லூரி புதுக்கோட்டை பிரிவு சாலையில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு கடந்த 15 நாட்களாக எரியவில்லை. இதனால் தேசிய நெடுஞ்சாலை புதுக்கோட்டை பிரிவு சாலையில் அதிக விபத்து ஏற்படுகிறது. மேலும் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சுரேஷ், முள்ளூர், புதுக்கோட்டை. 

ஆபத்தான மின்கம்பம் 
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு தெற்குப்பட்டி பகுதியில் சாலையோரம் மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சாலையில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வடகாடு, புதுக்கோட்டை. 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், இனியானூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை அப்பகுதி மக்கள் சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி விட்டு இப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்கள், இனியானூர், திருச்சி.


மேலும் செய்திகள்