அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று தொழிலாளி தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் தணிகாசலம்(வயது 41) தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உடைய இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீ்ட்டுக்கு வந்து அவருடையை மனைவி முத்துலட்சுமியிடம் சண்டையிட்டு வந்தார்.
சம்பவத்தன்றும் கணவன், மனைவிக்கிடையே சண்டை நடந்தது. இதில் மனமுடைந்த தணிகாசலம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தணிகாசலம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.