2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசாா் அங்கேயே கொட்டி அழித்தனர்.

Update: 2022-03-13 18:30 GMT
கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள மாயம்பாடி வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

 அப்போது அங்குள்ள மங்குனி தோட்டம் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த சாராய ஊறலை அங்கேயே கொட்டி அழித்தனர். தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்