எஸ்.வி.மங்கலத்தில் மாசி படையல் விழா

எஸ்.வி.மங்கலத்தில் மாசி படையல் விழா நடைபெற்றது

Update: 2022-03-13 18:23 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கூந்தலுடைய அய்யனார் பூர்ண தேவி புஷ்கலா தேவி திருக்கோவில் உள்ளது. பழமையான  இந்த கோவிலில் 6 அடி உயரம் உள்ள ஒரே கல்லால் ஆன கூந்தலுடைய அய்யனார் சிலை மற்றும் 5 அடி உயரம் கொண்ட பத்ரகாளி அம்மன் சிலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி படையல் விழா நடைபெறுவது வழக்கம். பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் மாசி படையல் விழா  நேற்று  வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கோவிலில் மூலவர் கூந்தலுடைய அய்யனார் பூரண தேவி, புஷ்கலா தேவி மற்றும் பத்ரகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. மலர் மாலைகளுடன் சிறப்பு அலங் காரத்தில் கூந்தலுடைய அய்யனார் மற்றும் பத்ரகாளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிங்கம்புணரி பகுதியினர் மற்றும் சேவுகப் பெருமாள் கோவில் பூஜகர்கள் எஸ்.வி. மங்கலம் கிராமத்தார்கள் கலந்துகொண்டனர்.  அன்ன தானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்