குந்தவேல் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
சங்கராபுரம் அருகே குந்தவேல் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தில் குந்தவேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர விழாகடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தன. 6-ம் நாள் விழாவான நேற்று சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது.