டெம்போ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
திங்கள்சந்தை அருகே டெம்போ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திங்கள்சந்தை:
திங்கள்சந்தை அருகே டெம்போ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திங்கள்சந்தை அருகே உள்ள தச்சன்பரம்பு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் சுபாஷ் (வயது 26), டெம்போ டிரைவர். டெம்போவுக்கு சரியான சவாரி கிடைக்காததால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், சுபாஷ் அடிக்கடி மது குடித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்புற்ற சுபாஷ் சம்பவத்தன்று தனது தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுபாஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.