தொழிலாளி விஷம் குடித்ததால் பரபரப்பு

தொழிலாளி விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-03-13 17:52 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் காட்டு பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டி என்பவரின் மகன் காளிமுத்து (வயது 36). ஆட்டோ ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார் இவரின் மனைவி ராமநாதபுரம் அண்ணாநகரை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். இந்த கடன் தொகையில் ரூ.95ஆயிரம் செலுத்திய நிலையில் மீதமுள்ள 5ஆயிரம் மட்டும் செலுத்தாமல் இருந்து வந்துள்ளாராம். இந்நிலையில் மீதமுள்ள பணம் மற்றும் வாங்கிய பணத்திற்கு வட்டி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கடன் மற்றும் வட்டி தொகையை கேட்டு 3 பேர் ஒர்க்‌ஷாப்பிற்கு சென்று காளிமுத்துவிடம் தகராறு செய்து தாக்கினார்களாம். இதனால் மனமுடைந்த காளிமுத்து வீட்டிற்கு சென்று வட்டி கட்ட முடியாததால் மன உளைச்சல் அடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்