காட்டேரிவீரன் கோவிலில் பொங்கல் விழா
காட்டேரிவீரன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.;
பொன்னமராவதி:
பொன்னமராவதியில் சலவை தொழிலாளர்களின் காட்டேரிவீரன் கோவிலில் 52-ம் ஆண்டு துறை பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பொன்-வலையப்பட்டி கழுதை புரளியில் அமைந்து உள்ள காட்டேரிவீரன் சுவாமிக்கு சலவை தொழிலாளர்கள் ஏராளமானோர் தலையில் பொங்கல் கூடை சுமந்து சென்று கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்தனர். பின்னர் சலவை தொழிலாளர்கள் ஒன்று கூடி குலவையிட்டு பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் பொன்னமராவதியை சுற்றி உள்ள பத்து சலவை தொழிலாளர்கள், கிராமமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.