மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-03-13 17:25 GMT
தொண்டி, 
திருவாடானை தாலுகா கப்பலூர் நாட்டைச் சேர்ந்த கடம்பூர் கிராமத்தில் கூந்தாள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி  யாக சாலையில் திருவா டானை தர்மசாஸ்தா கோவில் குருக்கள் ஆதிரெத்தின சிவாச் சாரியார், கண்ணங்குடி பசுபதீஸ்வரர் கோவில் ஸ்தானிகம் முத்துக்குமார சிவாச்சாரியார், பசுபதி சிவாச் சாரியார் ஆகியோரது தலைமையில் யாகவேள்விகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் முடிந்து புனித நீர் குடங்களை சிவாச் சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து கூந்தாள மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங் களின் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கருவறையில் அம் மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கு  அபிஷேகமும் தீபாராத னையும் நடைபெற்றது. தொடர்ந்து கூந்தாளமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் போன்ற அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கடம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொது மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் பார்க்கவ குல சமுதாய மக்கள்  கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கடம்பூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்