நாமக்கல்லில் பேக்கரியில் திடீர் தீ
நாமக்கல்லில் பேக்கரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல்லில் பரமத்தி சாலையில் கார்த்திக் பிரகாஷ் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்த பேக்கரியில் மின்கசிவு காரணமாக சுவிட்ஜ் போர்டில் திடீரென தீப்பற்றி கொண்டது. இதனால் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பேக்கரியில் இருந்து அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமையில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.