முத்துமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி
முத்துமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.;
வாய்மேடு:-
தலைஞாயிறு நாயுடு தெரு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்தல் மற்றும் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.