கால்நடை மருத்துவ முகாம்

கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-03-13 18:45 GMT
திட்டச்சேரி:-

திருமருகல் அருகே கோட்டூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு கால்நடை உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் முகமது சலாவுதீன் முன்னிலை வகித்தார். கால்நடை உதவி டாக்டர் முத்துக்குமரன் வரவேற்றார். இந்த முகாமில் கால்நடைகளுக்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் 350-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னதாக கால்நடைகளை சிறந்த முறையில் வளர்த்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் டாக்டர் ஸ்ரீதர், கால்நடை ஆய்வாளர் முருகேசன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்