கள் விற்ற 2 பேர் கைது
ராமநத்தம் அருகே கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநத்தம்,
ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏந்தல் கிராமத்தில் மாடசாமி மகன் கணேசன்(வயது 43) பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இதைபார்த்த போலீசார் கணேசனை கைது செய்தனர். இதேபோல் கல்லூரில் கள் விற்பனை செய்து கொண்டிருந்த தங்கம் மகன் கனி(40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.