ஆம்பூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்
ஆம்பூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
ஆம்பூர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 21-வது மாநில மாநாட்டை முன்னிட்டு ஆம்பூரில் உலக அமைதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. இதனை ஆம்பூர் தொகுதி வில்வநாதன் எம்.எல்.ஏ. கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தேவலாபுரம் பஸ் நிலையத்தில் இருந்து உமராபாத் பஸ் நிலையம் வரை இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும், முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கேடயத்துடன் சான்றிதழும் வழங்கப்பட்டது.
ஆண்கள் பிரிவில் அர்ஜுன், நேதாஜி, லோகேஸ்வரன் ஆகியோரும், பெண்கள் பிரிவில் கொடிலா, பிரியதர்ஷினி ஆகியோரும் வெற்றி பெற்றனர். சிறப்புப் பிரிவில் சரவணன், தியாகராஜன், ராஜசேகர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.