தர்மபுரிக்கு சரக்கு ரெயில்களில் 2550 டன் யூரியா வந்தது

தர்மபுரிக்கு சரக்கு ரெயில்களில் 2550 டன் யூரியா வந்தது.

Update: 2022-03-13 16:48 GMT
தர்மபுரி:
தர்மபுரிக்கு சரக்கு ரெயில்களில் 2,550 டன் யூரியா வந்தது.
 யூரியா
ஆந்திர மாநிலம் கங்காவரம் துறைமுகத்தில் இருந்து 1,331.10 டன் யூரியா, சென்னை மணலியில் இருந்து 1,219.500 டன் யூரியா ஆகியவை 2 சரக்கு ரெயில்கள் மூலம் தர்மபுரிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த யூரியா தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உரக்கடைகளுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பும் பணி நடந்தது. 
அப்போது வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன், விற்பனை அலுவலர்கள் ஜெகதீஷ் பாபு, மேகநாதன், மண்டல மேலாளர் மகாலட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட வேளாண் விற்பனை அலுவலர்கள் கூறுகையில், தர்மபுரி வந்த ஐ.பி.எல். யூரியாவில் 544 டன் தர்மபுரி மாவட்டத்திற்கும், 662 டன் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், 125 டன் திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் பிரித்து அனுப்பப்படுகிறது.
அரசு நிர்ணயித்த விலை
இதேபோல் எம்.எப்.எல். யூரியா தர்மபுரி மாவட்ட உரக்கடைகளுக்கு 543.150 டன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 12.150 டன், கிருஷ்ணகிரி மாவட்ட உரக்கடைகளுக்கு 614.790 டன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 49.500 டன் என பிரித்து அனுப்பப்படுகிறது. விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசு நிர்ணயித்த விலையில் யூரியாவை பெற்று பயன்பெறலாம் என்றார்.

மேலும் செய்திகள்