பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி பெயிண்டர் சாவு

பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் பெயிண்டர் இறந்தார்.

Update: 2022-03-13 16:48 GMT
பாலக்கோடு,:
பாலக்கோடு அருகே முங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன். இவரது மகன் சீனிவாசன் (வயது 26). பெயிண்டர். இவர் பாலக்கோட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பாப்பாரப்பட்டி நோக்கி சென்று கொண்டு இருந்தார். எர்ரனஅள்ளி அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், சீனிவாசன் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் சீனிவாசன் படுகாயம் அடைந்தார். மற்றொரு நபர் லேசான காயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சீனிவாசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டர். ஆனால் வழியிலேயே சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்