கெலமங்கலம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பிளஸ்1 மாணவி சாவு
கெலமங்கலம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பிளஸ்1 மாணவி இறந்தாள்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள எச்.செட்டிப்பள்ளி கணேஷ் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். கட்டிட தொழிலாளி. இவரது மகள் துளசி (வயது 16). சிறுமி கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாள். மாணவி எச்.செட்டிப்பள்ளியில் உள்ள விவசாயி சீனிவாஸ் என்பவரது தோட்டத்திற்கு சென்றாள். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மாணவி தவறி விழுந்து இறந்தாள். இதுகுறித்து கெலமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.