பர்கூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
பர்கூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பர்கூர்:
பர்கூர் போலீசார் கப்பல்வாடி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை செய்தனர். அங்கு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கோவிந்தராஜ் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். கந்திகுப்பம் போலீசார் ஒரப்பம் பகுதியில் சோதனை செய்தபோது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற ரமேஷ் (37) என்பவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.