தேன்கனிக்கோட்டை அருகே எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
தேன்கனிக்கோட்டை அருகே நடந்த எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
தேன்கனிக்கோட்டை,:
தேன்கனிக்கோட்டை அருகே நடந்த எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மல்லிகார்ஜூன துர்க்கம் மலை மீது பிரம்மராம்பா தேவி உடனுறை சிடில மல்லிகார்ஜூனசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி நேற்று காலை எருது விடும் விழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, கர்நாடகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. இந்த காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டன.
சீறிப்பாய்ந்த காளைகள்
தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை அடக்கி அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த பலூன்கள், அலங்கார தட்டிகளை இளைஞர்கள் எடுத்தனர். இந்த எருதுவிடும் விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
இதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சுப்பிரமணி மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.