ஆண் குழந்தை பெற்றெடுத்த சிறுமி

தேனி அருகே சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அவரை கர்ப்பிணியாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-03-13 16:24 GMT
தேனி:
தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியை சேர்ந்தவர் மாரி (வயது 25). கூலித்தொழிலாளி. இவர் கவரிங் நகைகள் விற்பனை கடையில் வேலை பார்த்த 17 வயது சிறுமியுடன் ஆசை வார்த்தைகள் கூறி பழகினார். சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் பழகி வந்த மாரி, கடந்த ஆண்டு அவரை தேனி கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மலைப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பிணி ஆனாள். இதுகுறித்து அவள், மாரியிடம் கூறினார். ஆனால் அவர் கருவை கலைத்து விடுமாறு மாத்திரைகள் வாங்கி கொடுத்தார். 


மாத்திரைகள் சாப்பிட்டும் கர்ப்பம் கலையவில்லை. இந்த விவரத்தை சிறுமி தனது தாயாரிடமும் கூறாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 11-ந்தேதி அவருக்கு வயிற்று வலி அதிகமானது. இதனால் சிறுமி தனது தாயாரிடம் விவரங்களை கூறினார். இதைக்கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் சிறுமிக்கு நேற்று முன்தினம் வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த விவரத்தை சிறுமியின் தாய் அப்பகுதியை சேர்ந்த அங்கன்வாடி பணியாளரிடம் கூறினார்.

 பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுமியும், குழந்தையும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த தேனி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

 அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்து மாரியை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்