ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கருட சேவை

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கருட சேவை ந நடந்தது;

Update: 2022-03-13 16:21 GMT
தென்திருப்பேரை:
நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் ெதாடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி பொலிந்துநின்றபிரான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதிப் புறப்பாடு நடைபெறுகிறது. நேற்று இரவு கருட சேவை நடந்தது. கருட வாகனத்தில் பொலிந்து நின்றபிரானும், ஹம்ச வாகனத்தில் நம்மாழ்வாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். வருகிற 17-ந் தேதி(வியாழக்கிழமை) தேர் திருவிழா நடைபெறுகிறது. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அஜித் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்