அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பெண்ணாடத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

Update: 2022-03-13 16:15 GMT
பெண்ணாடம்,

பெண்ணாடத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடி ஏற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பெண்ணாடம் ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டு பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்