வடமதுரை பேரூராட்சி அலுவலகம் முன்பு முதியவர் இறந்து கிடந்ததால் பரபரப்பு
வடமதுரை பேரூராட்சி அலுவலகம் முன்பு முதியவர் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வடமதுரை:
வடமதுரை பேரூராட்சி அலுவலகம் முன்பு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் இறந்து கிடந்தவர் அண்ணா நகரை சேர்ந்த சின்னவீரன் (வயது 60) என்பதும், பேரூராட்சி அலுவலகம் முன்புறம் அமர்ந்திருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.