சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் மலைப்பகுதிகளில் நடப்பட்ட மரக்கன்றுகள் தண்ணீரின்றி கருகின

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் மலைப்பகுதிகளில் நடப்பட்ட மரக்கன்றுகள் தண்ணீரின்றி கருகின

Update: 2022-03-13 16:03 GMT
சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து பெரிய மலையில் உள்ள ஸ்ரீயோக லட்சுமி நரசிம்ம சுவாமி, சிறிய மலையில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.  மலைக் கோவில்கள் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் மூலம் பல்வேறு வகையான சுமார் 150-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கோவில் செயல் அலுவலர் ஜெயா மற்றும் பணியாளர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர். ஆனால் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிக்கவில்லை.

இதனால் பல மரக்கன்றுகள் தண்ணீர் இன்றி கருகி விட்டன. ஓரிரு இடங்களில் மட்டுமே மரக்கன்றுகள் உள்ளன. இந்த  மரக்கன்றுகளையாவது கோவில் நிர்வாகம் தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள இடத்தை இளைஞர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்