வளவனூர் அருகே வீட்டு தோட்டத்தில் மின் ஒயர் திருட்டு

வளவனூர் அருகே வீட்டு தோட்டத்தில் மின் ஒயர் திருட்டு;

Update: 2022-03-13 16:03 GMT
வளவனூர்

வளவனூர் அருகே உள்ள கெங்கராம்பாளையம் மாரியம்மன் கோவில் தெரு கரைமேடு பகுதியை சேர்ந்தவர் பழனி மகன் பாலமுருகன். இவர் தனது வீட்டு தோட்டத்தில் ஒயரிங் வேலைக்காக வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மின் ஒயரை அதே பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(வயது 45) என்பவர் திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபால கிருஷ்ணனை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்